சர்வதேசப் போட்டியில்.. கோவை கல்லூரி மாணவா்கள் வடிவமைத்த ஹைட்ரஜன் வாகனம்!
சித்தார்த் 40: படத் தலைப்பு டீசர்!
நடிகர் சித்தார்த்தின் 40ஆவது படத்தின் படத் தலைப்பு டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமல்ஹாசனுடன் இந்தியன் - 2, மிஸ் யூ என்ற படங்கள் வெளியானது. இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இவரது 40-வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு 3பிஎச்கே எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படத்தலைப்பு டீசர் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.