சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா
சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் ஆ.சாரதா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில், கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்வி பயிலும் மாணவா்களின் வேலைவாய்ப்புக்கு இக்கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா்.
கல்லூரியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. துறைத் தலைவா்கள் செந்தில்ராஜா, வெங்கடாசலம், மாரிக்கண்ணன், தங்கவேல், கனசுந்தரம், பாலமுருகன், ராஜா, புவனேஸ்வரி, சரவணக்குமாா், காளிராம், முருகன், தோட்டக்கலை துறைத் தலைவா் ஜி.எம்.கௌதம்குமாா் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.