நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
சினிமாவும் சாப்பாடும் தான் இங்கு பிரதானம்! - சென்னையின் பொன்னான நினைவலை #ChennaiDays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சென்னையை நான் முதன்முதலில் பார்த்தது 7 வது படிக்கும்போது... அப்போது என் பெரியப்பா ஒருவர் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார்... அவர் வீட்டுக்கு போனதும் அதுதான் முதல் முறை...
ஆனாலும் அந்த நாட்கள் அந்தளவுக்கு நினைவில்லை...
பீச், சினிமா, மிருககாட்சி சாலை இப்படித்தான்...
அதன்பின் 1983 ம்வருடம், நான் பாலிடெக்னிக் முடித்து சர்ட்டிபிகேட்டை கிண்டி எம்ப்ளாய்மண்ட் எக்ஸேஞ்சில்தான் பதிவு செய்தேன்....
அதற்காகவே என் பெரியப்பா வீட்டில் வந்து தங்கி விட்டேன்... என் பெரியப்பா பையன் என்னை விட இரண்டு வயதுதான் மூத்தவன்... அவன் ரஜினி ரசிகன்.. பின்னாளில் சென்னை ரஜினி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தான்..
சென்னை சென்றவுடன் என் முதல் வேலை நேரே மவுண்ட் ரோடு போய்விடுவேன்....
அங்கு அண்ணாசாலையில் அண்ணா சிலையருகே ஏதாவது ஒரு சிக்னல் அருகே நின்று வரும் போகும் கார்களை, மாடிபஸ்களை வேடிக்கை பார்த்தவாறு நிற்பேன்.. சுரங்கப்பாதயில் மூன்று முனைகள் இருக்கும் ஒவ்வொன்றாக புகுந்து மேலே வந்து வேடிக்கை பார்ப்பேன்..
பின் தேவிபாரடைஸ், சாந்தி தியேட்டர்களில் அன்றோ அல்லது மறுநாளைக்கோ ஏதாவது ஒரு புது படத்துக்கு ரிசர்வ் பண்ணி வைத்துக்கொள்வேன்..

சிதம்பரத்திலிருந்து எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செங்கோட்டை பாஸ்ட் பாசஞ்சரில் வந்து இறங்குவேன்... இறங்கி அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்து ரயில்வே பிளாட்பார்ம்களுக்கிடையே டாக்ஸிகள் வந்து நிற்பதை அதிசயமாக பார்ப்பேன்....
வெளியே வந்தால் இம்பாலா ஹோட்டலில் ஒரு காபி சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டுக்கு கிளம்புவேன்..
அப்போதும் சரி.. இப்போதும் சரி.. சென்னை ஒவ்வொரு தடவையும் எனக்கு புதுமையாகத்தான் தெரியும்..
நான் மூர் மார்க்கெட் போய் எனக்கு பாடபுத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.. அங்கு கிடைக்காத பொருளே இல்லை என்பார்கள்..
அதை சுற்றி சுற்றி வருவேன்... முடித்து சென்ட்ரல் ஸ்டேஷன் போய் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்து அங்கிருந்து வெவ்வேறு ஸ்டேட்டுகளுக்கு கிளம்பும் ரயில்களை பார்த்து மகிழ்வேன்...
நான் என்டர் தி டிராகன் சஃபையர் தியேட்டர் போய் பார்த்தது இன்னும் ஞாபகம் உள்ளது..
அந்த காம்ப்ளக்ஸில் ப்ளூடைமண்ட்( தி கன்டினியூஸ் தியேட்டர்) டில் போய் டிக்கெட் எடுத்து அரை நாள் முழுக்க அமர்ந்து ஒரே ஆங்கிலப்படத்தை இரண்டு மூன்று தடவை பார்த்த அனுபவமும் உண்டு...
காலை 9.00 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 12.00 வரை ஒரே படம் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும்... டிக்கட் கவுண்டரில் ஒரு ஆள் அமர்ந்தே இருப்பார்... திரும்ப போகும் போது டிக்கெட்டை வாங்கிக்கொள்வார்கள்... முக்கால் மணிநேரத்துக்கு ஒரு இடைவேளை விடுவார்கள்... சென்னையில் இப்படி எங்கெல்லாம் ஆச்சரியங்கள் இருக்கிறதோ அதையெல்லாம் தேடி தேடி பார்த்து அனுபவித்திருக்கிறேன்...

இன்றைக்கும் சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்..
நண்பர்களில் சிலர் சென்னை ஒரே வெயில், பயங்கர டிராபிக் எப்படித்தான் உனக்கு இந்த சென்னை பிடித்திருக்கிறதோ!" தெரியவில்லை!" என அங்கலாய்த்து கொள்வார்கள்..
நான் ரிடையர்ட் ஆகியும் இந்த சென்னையில்தான் தங்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேனென்றால் பாருங்கள்...
எனக்கு சென்னையில் கார் டிரைவிங் அதுவும் ஆளரவமற்ற நள்ளிரவு நேரங்களில் போவதென்றால் மிகவும் விருப்பம்..
இரவு நேரங்களில் காரில் மனைவி, மகள், மாப்பிள்ளை, பேத்தி இவர்ளுடன் மவுண்ட் ரோடு பிலால் ஓட்டல் போய் பன் பட்டர் ஜாம் சாப்பிட்டு என்ஜாய் செய்த அனுபவமும் உண்டு...
முதன் முதலில் விஜிபி கோல்டன் பீச் போனது, அங்கே யாராலும் சிரிக்கவைக்க முடியாத காவலன், அதோடு அன்று உள்ளே ஒரு இடத்தில் ரஜினி, கவுதமி நடித்த குருசிஷ்யன் படப்பாடல் ஷூட்டிங்கையும் பார்த்து ரசித்தேன்..
என்ன இதில் சினிமாவும், சாப்பாடும்தான் அதிகமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா... அதுவும் முக்கியம்தானே....
-தேன்ராஜா , நெய்வேலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!