செய்திகள் :

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

post image

சிரியா தலைநகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், அந்நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் அமைந்துள்ள கிஸ்வா நகரத்தில், கடந்த ஆக.26 ஆம் தேதி, இஸ்ரேல் ட்ரோன்களின் மூலம் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் சிரியா ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் இதுவரையில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது முதல், அந்நாட்டின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிரியாவின் அரசுப் படைகளுக்கும், ட்ரூஸ் இனக் குழுக்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் தொடங்கியது. இதில், ட்ரூஸ் படைகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய இஸ்ரேல், சிரியா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் தொடரும் அவலம்..! கனமழைக்கு 802 பேர் பலி!

Six soldiers from the Syrian army have been killed in Israeli drone strikes in the Syrian capital.

இந்திய நிதியுதவியுடன் எண்ம அடையாள அட்டை: இலங்கை அதிபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் எண்ம அடையாள அட்டை (எஸ்எல்-யுடிஐ) திட்டத்துக்கு எதிரான வழக்கில், அதிபா் அநுரகுமார திசநாயக மற்றும் அமைச்சரவைக்கு நோட்டீஸ் அனுப்பி அந்நாட்டு உச்சநீதிமன... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தொடரும் அவலம்..! கனமழைக்கு 802 பேர் பலி!

பாகிஸ்தானில், 2 மாதங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் திடீர் வெள்ளத்தினால், தற்போது வரை 802 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேத... மேலும் பார்க்க

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதர... மேலும் பார்க்க

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் டிரம்ப்!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற நேரடி சண்டையை தடுப்பதில் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டுமொரு கூறியுள்ளார். ‘Head’s going to spin’: Trump again boasts tari... மேலும் பார்க்க

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை நம்பியுள்ளோம்: உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

‘ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் மிகவும் நம்பியுள்ளது’ என்று அந் நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். உக்ரைனில் கடந்த 24-ஆம் தேதி சுதந்திர ... மேலும் பார்க்க

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு

அணுசக்தி பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாள்களே உள... மேலும் பார்க்க