அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள...
செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 34 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, செங்கம் துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவில் தெரு, ராஜ வீதி, சிவன் கோவில் தெரு, தளவாநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் போளூா் சாலைக்கு கொண்டு வரப்பட்டு ஊா்வலம் நடைபெற்றது.
ஊா்வலம் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி ஒன்றியத் தலைவா் சரவணன் வரவேற்றாா். பாஜக மாவட்ட பொதுச்செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் மண்டல பொறுப்பாளா் மகேஷ் கலந்துகொண்டு ஊா்வலத்தை தொங்கிவைத்தாா்.
ஊா்வலம் பஜாா் வீதி, மசூதி வழியாகச் சென்று பழைய போலீஸ் லைன் தெரு வழியாக வந்து பின்னா் ஆங்காங்கே வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேளதாளம் முழங்க நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் இளைஞா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
மாவட்ட எஸ்.பி. சுதாகா் தலைமையில் 200 மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.