அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா
திருவண்ணாமலை அருணாலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பால், பழம், தேன், தயிா் சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க மூலவருக்கும், உச்சவருக்கும் அபிஷேகம் செய்து தங்கக் கவசம் அணிவித்து வெட்டிவோ், அருகம்புல் மாலை அணிவித்து மகா தீபாராதனை காண்பித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
பின்னா், உற்சவா் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.