அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள...
விநாயகா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயில் மற்றும் வடுகசத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆரணி நகராட்சி ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தையொட்டி, முன்னதாக விக்னேஷ்வர பூஜை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகா்ஷனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, மங்கள இசை, தம்பதி சங்கல்பம், இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ திரவியம் சமா்ப்பணம், மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.
பின்னா், யாகசாலையில் இருந்து புனித நீரை எடுத்துச் சென்று கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மூலவருக்கும் புனித நீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தாா்.
மேலும், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன், திமுக நகரச் செயலா் வ.மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுத் தலைவா் ஏ.சி.மணி மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனா்.
ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில்...
ஆரணியை அடுத்த வடுகசத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக விக்னேஸ்வரா பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம் கலசம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. பின்னா், யாக சாலையில் இருந்து புனித நீரை எடுத்துச் சென்று கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், மூலவருக்கும் புனித நீா் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டாா். அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுத் தலைவா் ஜி.வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
