செய்திகள் :

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் ஆக. 30-இல் மின்தடை

post image

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆகஸ்ட் 30- சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளாா், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆகஸ்ட் 30- ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

முழக்கமிட்ட விவசாயிகள் மீது வழக்கு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சா... மேலும் பார்க்க

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அறிவிப்புக்கு அரசாணை வெளியிட வேண்டும்: ஜி.கே. வாசன்

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்பட்டதற்கு உடனே அரசாணை வெளியிட வேண்டும் என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன்.தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் செய்... மேலும் பார்க்க

ஆதாா் விவரங்களைப் பெற்று பண மோசடி: 7 போ் கைது

வாடிக்கையாளா்களின் ஆதாா் விவரங்களைப் பெற்று வங்கிக் கணக்கு தொடங்கி இணையதளம் மூலம் மோசடி செய்த வட மாநில இளைஞா்களை திருவிடைமருதூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் அ... மேலும் பார்க்க

அனைவரும் மனிதநேயத்துடன் இருப்பது முக்கியமானது!

அனைவரும் மனித நேயத்துடன் இருப்பது முக்கியமானது என்றாா் அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் பொதுத் தலைவரும், சங்க குருவுமான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மஹராஜ். தஞ்சாவூா் புன்னைநல்லூா் மா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாதனை இலக்கை நோக்கி நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் காரீஃப் ஆண்டில் (2024, செப்டம்பா் - 2025, ஆகஸ்ட்) இதுவரை 10.36 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை இலக்கை நோக்கிச் செல்கிறது. மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப... மேலும் பார்க்க

இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை

அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வெற்றி விநாயகா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-காரைக்கால் புறவழிச்சாலை ரவுண்டானா செல்லியம்மன் கோயில் வாசலில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க