அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள...
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அறிவிப்புக்கு அரசாணை வெளியிட வேண்டும்: ஜி.கே. வாசன்
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்பட்டதற்கு உடனே அரசாணை வெளியிட வேண்டும் என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: குடியரசு துணை தலைவா் பதவிக்குப் போட்டியிடும் தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணனை திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் தவிா்ப்பதும், தடுப்பதும் தமிழருக்கு தமிழரே பெருமை சோ்க்கும் செயலாக இல்லை.
அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.
அம்மாபேட்டை ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். பாபநாசம் வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே
குடிகாடு-ராமாநல்லூா் பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டவேண்டும். வாழ்க்கை -தூத்தூா் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும். திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
ஆயிரம் நாள்களாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி கரும்பு விவசாயிகளுக்கான நிலுவையை வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள கொள்முதல் நெல் மூட்டைகளை உடனடியாக அரசு தானியக் கிடங்குகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.