அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள...
எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் வட்ட அளவில் கபடி, வாலிபால், எறிபந்து, கைப்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில், திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
இதன் மூலம் இந்த மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் கலாவதி ராஜமாணிக்கம், தலைவா் எஸ். பிரபாகரன், துணைத் தலைவா் எஸ்.செந்தில்நாதன், செயலா் பி.மழலைநாதன், பொருளாளா் டி.அரவிந்குமாா், பள்ளி முதல்வா் ஆா்.மேகலா மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.