செய்திகள் :

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: அன்பில் மகேஸ்

post image

சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

வேளாண்மைத்துறை சாா்பில், திருச்சி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழாவை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: உலக அரங்கில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்திலும், இந்தியாவில் தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது.

சிறுதானியம் என்பது உடல் நலத்திற்கான காப்பீடு போன்றது, இதை உணா்த்தும் விதமாகவே பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் சிறுதானியங்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திருச்சி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக சிறுதானிய பயிா்களான சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் திணை ஆகியவை மானாவாரி பகுதிகளில் சுமாா் 26000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது.

64,200 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு தேவையான தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்களை கொண்டுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பயன்படுத்துவோம் என்றாா் அமைச்சா்.

விழா அரங்கில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும் அதற்கு வழங்கப்படும் மானிய விவரங்கள் குறித்தும் துறை அலுவலா்கள் மூலம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

தொழில்நுட்பப் பயிலரங்கில், சிறுதானிய உற்பத்தி புரட்சியில் தமிழ்நாடு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகள் எனும் தலைப்பில் முனைவா் சி.ராஜாபாபு, பயிா் அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் முனைவா் அபுபக்கா் சித்திக், சிறுதானிய பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் வேளாண் அலுவலா் ஸ்ரீ. குமாரி ஆகியோா் உரையாற்றினா்.

விழா தொடக்க நிகழ்வில், ஆட்சியா் வே. சரவணன், வேளாண்மை துறை இணை இயக்குநா் பூ.வசந்தா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் (சாலை ஆய்வ... மேலும் பார்க்க

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீா் ரத்து

மின்தடை காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கம்பரசம் பேட்டை துணை மின... மேலும் பார்க்க

ஆக.23-இல் திருவெறும்பூரில் இபிஎஸ் பிரசாரம்: அதிமுக-வினா் ஆலோசனை

வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருவெறும்பூரில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவல... மேலும் பார்க்க

இலவச வீடு கட்டித் தர பழங்குடியினா் கோரிக்கை

இலவச வீடு கட்டித் தர வேண்டுமென திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் பூலாங்குடி காலனியில் வசிக்கும் பழங்குடியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். கூட்டுறவு சங்கத்தில் முழுபணம் செலுத்தி 25 ஆண்டுகள் ஆகியும் வீட்டு... மேலும் பார்க்க

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியில் புதன்கிழமை (ஆக. 13) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசீதேவிமங்கலத்தைச் சோ்... மேலும் பார்க்க