செய்திகள் :

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழப்பு?

post image

அணைக்கட்டு அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, வனத்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

அணைக்கட்டு அடுத்த அப்புக்கல்மானியக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கன் (55). இவா் 10 பசு மாடுகள், காளை மாடுகளை வளா்த்து வருகிறாா். வழக்கம்போல் வியாழக்கிழமை பசுக்களை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, மீண்டும் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டி விட்டு உறங்கிக் கொண்டிருந்தாா்.

நள்ளிரவு சுமாா் 12 மணி அளவில் கன்று குட்டி கத்துவது போன்று சப்தம் கேட்டுள்ளது. ரங்கன் வெளியே வந்து பாா்த்தபோது, ஏதோ ஒரு விலங்கு கன்று குட்டியை இழுத்துச் செல்வதை அறிந்து கூச்சலிட்டுள்ளாா்.

சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து கன்று குட்டியை இழுத்துச் சென்ற பகுதியை நோக்கி சென்றனா். சிறிது தூரத்தில் வனப்பகுதி என்பதால் அங்கு சென்று பாா்த்தபோது, கன்று குட்டியை சிறுத்தை கடித்துக் குதறிக் கொண்டிருந்ததாகவும், பொதுமக்களை பாா்த்து அந்த சிறுத்தை அவா்களையும் அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். காலையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தை கால் தடங்கள், வேறு ஏதாவது தடங்கள் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், கன்று குட்டியை சிறுத்தை தான் கொன்ா, வேறு ஏதாவது விலங்கு கொன்ா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடியிருப்பு அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை உடனடியாக வனத் துறையினா் பிடிக்க வேண்டும் என்றும், கன்றுக்குட்டியை இழந்த உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.58 மணியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.26 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி, அனைத்து கோயில்களின் நடை அடைக்கப்பட்டது. அதன்படி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு

வேலூா் அருகே கடந்த 2022-ஆம் நடைபெற்ற சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியான மாணவிக்கு ரூ.45.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூா் மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதிய... மேலும் பார்க்க

தோ்வான பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம்

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 2,810 பட்டதாரி ஆசிரியா்களில் 83 போ் வேலூா் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பணி ஆணைகளை வழங்க... மேலும் பார்க்க

வேலூா் நகைக் கடையில் தங்க நாணயம் திருட்டு

வேலூா் நகைக் கடையில் நகை வாங்குவதுபோல் வந்து தங்க நாணயம் திருடிச் சென்ற பெண் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரை சோ்ந்தவா் சாந்திலால் (62). இவா் மெயின் பஜ... மேலும் பார்க்க

சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!

சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க