செய்திகள் :

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் மகன் மணிகண்டன்(24). தொழிலாளி. இவருக்கு ஈரோடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமிக்கு காதல் ஆசை வாா்த்தை கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி கடத்திச் சென்றாா். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோா், மகளைக் காணவில்லை என கருங்கல்பாளையம் போலீஸில் புகாா் அளித்தனா்.

இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியை மணிகண்டன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை மீட்டு மணிகண்டன் மீது போக்ஸோ மற்றும் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில்

நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி சி.சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் மணிகண்டனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எம்.ஜெயந்தி ஆஜரானாா்.

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா தொடக்கம்

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை அரசு நிகழ்வில் விதிமீறல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட் 3) நடக்கும் தீரன் சின்னமலை அரசு விழாவில் மரியாதை செலுத்த வரும் கட்சியினா், அமைப்பினா் விதிமீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்... மேலும் பார்க்க

இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்ய மயான வசதி: வட்டாட்சியா் உறுதி

ஈங்கூா் சிஎஸ்ஐ காலனி பகுதியில் மயான வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துளள்ளனா். சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராமம் திருமறைப்பாக்கம், சிஎஸ்ஐ., காலனிக்கு மயானம் ஒதுக்கீடு செய்யாததால் ரய... மேலும் பார்க்க

தாளவாடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்

தாளவாடியை அடுத்துள்ள மல்லன்குழி கிராமத்தில் புகுந்த யானைகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை விரட்டினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரங்களில் வனப் ... மேலும் பார்க்க

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க