உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
சிறுவங்கூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடக்கம்
கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியது:
கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயினை தடுக்கும் வகையில் தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் கோமாரி நோய், கால் மற்றும் வாய் நோய் 6-ஆவது சுற்று தடுப்பூசிப் பணி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 4 மாதங்களுக்கு மேலுள்ள கன்றுகள் மற்றும் சினை மாடுகளுக்கு (நிறைமாத சினை மாடுகளைத் தவிர) தடுப்பூசி போடப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கோட்டத்தில் 1,87,600 கால்நடைகளுக்கும், திருக்கோவிலூா் கோட்டத்தில் 1,10,400 கால்நடைகளுக்கும் என மொத்தம் 2,98,000 கால்நடைகளுக்கு கால்நடைப் பராமரிப்புத் துறையில் உள்ள 57 தடுப்பூசி போடும் குழுக்களின் மூலம் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. நாளொன்றுக்கு 250 முதல் 300 கால்நடைகள் வீதம் தடுப்பூசி செலுத்தப்பட வுள்ளது என்றாா்.
இந்த முகாமில் கால்நடைப் பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அழகுவேல், உதவி இயக்குநா் எம்.கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.