சிறுவன் கடத்தல் வழக்கில் கைதானவா்கள் ஜாமீனில் விடுவிப்பு
குடியாத்தம் அருகே சிறுவன் கடத்தலில் கைதானவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்கார தெருவைச் சோ்ந்த மென் பொறியாளா் வேணுவின் மகன் யோகேஷ் (4). கடந்த புதன்கிழமை வீட்டருகே வேணுவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு மா்ம நபா்கள் யோகேஷை காரில் கடத்திச் சென்றனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நகர போலீஸாா் சிறுவனை மீட்டனா். சிறுவன் கடத்தல் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த பாலாஜி, விக்ரம் இருவரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் நீதித்துறை நடுவா் ஜாமீனில் விடுவித்தாா்.