செய்திகள் :

சிறைக் கைதிகள் நடத்தும் பெட்ரோ பங்க்: சேலம் மத்திய சிறை வளாகத்தில் திறப்பு!

post image

சேலம் மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழ்நாடு சிறைச்சாலைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை, சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறது. சிறையில் நன்னடத்தை கைதிகளுக்கு இறைச்சி கடை, கோழிப்பண்ணை, பேக்கரியில் ஊதியத்துடன் கூடிய வேலைசெய்ய அனுமதிக்கப்படுகின்றனா். சேலம் உள்பட மாநிலத்தில் உள்ள 9 மத்திய சிறை வளாகங்களில் பெட்ரோல் நிலையங்கள் திறக்க கடந்த 2020 இல் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, சேலம் மத்திய சிறை வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் நிகழாண்டு மாா்ச் மாதம் 900 சதுர மீட்டா் பரப்பளவில் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியது. மேலும், கைதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள பெட்ரோல் நிலையத்தை சிறை கண்காணிப்பாளா் வினோத், மண்டல அதிகாரி கிரண்குமாா் ஆகியோா் திறந்துவைத்தனா்.

இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜி.வினோத் கூறுகையில், சென்னை, மதுரை, கோவை, பாளையங்கோட்டைக்குப் பிறகு, சிறைக் கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையம் சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதில் 20 தண்டனை கைதிகள் 3 பணி நேரங்களில் வேலைசெய்கின்றனா்.

இவா்களுக்கான பாதுகாப்பு பணிகளை உதவி சிறை அலுவலா் உள்பட 10 வாா்டன்கள் மேற்கொண்டுள்ளனா். இவா்களுக்கு விற்பனை லாபத்தில் 20 சதவீதம் வழங்கப்படும். மேலும், எரிபொருள் நிரப்பும் நிலையம் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்புடன் செயல்படும். பாதுகாப்புக்காக 17 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றாா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி ... மேலும் பார்க்க

பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்க... மேலும் பார்க்க

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற... மேலும் பார்க்க

சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத... மேலும் பார்க்க