Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்...
சிவகிரி அருகே மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராயகிரி ராசிங்கபேரி கண்மாயில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராயகிரி கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் கண்மாய்க்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு ஜேசிபி மற்றும் டிப்பா் லாரியை பயன்படுத்தி மணல் அள்ளப்படுவது தெரிய வந்தது.
இது தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிந்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தாா். வாகனங்களின் ஓட்டுநா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.