செய்திகள் :

'சிவாஜி சாருக்கு அன்னிக்கு 103 டிகிரி காய்ச்சல்' - 'என் ஆச ராசாவே' அனுபவம் சொல்லும் கஸ்தூரி ராஜா

post image

சினிமா உலகின் சிகரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது 24வது நினைவு தினம் இன்று. கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் 'என் ஆச ராசாவே' என்ற படத்தில் அவர் நடித்திருந்ததால், நடிகர் திலகத்தின் நினைவலைகள் குறித்து கஸ்தூரி ராஜாவிடம் கேட்டோம். கனத்த இதயத்துடன் பேச ஆரம்பித்தார்...

சிவாஜி கணேசன்

சினிமாவை தவிர வேற எதிலும் அவர் கவனம் இருக்காது.!

'' இதுவரைக்கும் 25 படங்கள் டைரக்ட் பண்ணியிருப்பேன். அதுல முத்தாய்ப்பான ஒரு அனுபவம்னா நடிகர் திலகத்துடன் பணியாற்றியதுதான். அவருடன் பணிபுரிந்த அனுபவங்களை சொல்றதுக்கு வார்த்தைகளே கிடையாது. அவரோட படம் பண்ணும் போதுதான் நான் ஒரு இயக்குநர் என்பதையே நான் ஒத்துக்கிட்டேன். அப்படி ஒரு அனுபவம் இனிமே நமக்கு ஏற்படப் போறதும் இல்ல. அப்படி ஒரு நடிகர் இனிமே வரப்போறதும் இல்ல. சினிமாவை தவிர வேற எதிலும் அவர் கவனம் இருக்காது.

'என் ஆச ராசா' படப்பிடிப்புக்கு அவர் அதிகாலை 6.50க்கு மேக்கப்போடு இருந்தது ஒரு நாளும் தவறினதில்லை. அவரோட டேக்குகள்ல வசன உச்சரிப்புகளினாலேயோ, முக அசைவுகள்னாலேயோ ஒரு டேக் கூட ரீடேக் போனதில்ல. நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு பிரமிக்க வச்சிடுச்சு. இப்பெல்லாம் நடிகர்கள் ஒரு ஷாட் முடிந்ததும், உடனே கேரவனுக்கு போயிடுறாங்க. ஆனா, அவர் ஒரு ஷாட் முடிஞ்சலும் கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தை விட்டு, வெளியே எங்கேயேயும் போக மாட்டார்.

ஒரு சேரை போட்டு அங்கேயே உட்கார்ந்து மற்ற நடிகர்கள் எப்படி நடிக்குறாங்க, எப்படி பேசுறாங்கனு என்பதையும் அந்த ஷாட்டுல டைரக்டர் என்ன தப்பு பண்றார்னும் கவனிப்பார். அதன் பிறகு அவர் ஷாட்டில் நடிக்கும் போது, எல்லார் தப்பையும் சரி செய்யற மாதிரி அழகா நடிச்சிடுவார். இது தான் அனுபவம்னு புரிய வச்சிடுவார்.

கஸ்தூரிராஜா

இன்னொரு முக்கியமான சம்பவம் ஒண்ணு சொல்றேன். ஒரு நாள் சிவாஜி கார்டன்ல படப்பிடிப்பு. அதற்கு அடுத்தநாள் சிவாஜி சாரோட காம்பினேஷன்ல மற்ற நடிகர்களும் சேர்ந்து நடிக்கற ஷாட் படமாக்கணும். ஆனா, முதல்நாள் சாயந்திரமா அவர் வீட்டுல இருந்து போன் வந்தது. 'சிவாஜி சாருக்கு கடுமையான காய்ச்சல். ஷூட்டிங்கை ஒருநாள் தள்ளி வச்சுக்க முடியுமா?' கேட்டாங்க. சரினு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டோம். ஆனா அன்னிக்கு நடுராத்திரியில் அவர் வீட்டுல இருந்து போன் பண்றாங்க. 'எல்லாரும் அசம்பிள் ஆகுறதுக்கு எவ்வளவு சிரமம்னு தெரியும். ஆதனால, ஷூட்டிங் தடைபட வேண்டாம். நாளை வந்துடுறேன்.. சொல்லச் சொன்னாங்க"னு போன்ல சொன்னாங்க. மறுநாள் அவர் படப்பிடிப்புக்கு வர்றார். அவரோட மூக்கிலும் கண்கள்லேயும் நீர் ஊத்துது. 103 டிகிரி கடும் காய்ச்சல்ல வந்து நடிச்சுக் கொடுத்துப்போனார். அதான் சிவாஜி.'' என்கிறார் நெகிழ்வுடன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

9 Years Of Kabali: கோவா படத்தின்போது கிடைத்த ஐடியா; ரஞ்சித்தை அனுமதித்த ரஜினி!| Kabali Unknown Facts

'கபாலி' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ரஜினிக்கு 'கோச்சடையான்', 'லிங்கா' என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. அப்படத்திற்குப் பிறகு 2015-ம் ஆண்டு ரஜினிக்கு எந்தத் திரைப... மேலும் பார்க்க

D56: "தனுஷின் 56-வது படம், என்னுடைய மைல்கல் திரைப்படம்!" - விகடன் மேடையில் மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பைசன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. த்ருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசைய... மேலும் பார்க்க

"சிவாஜி இறந்தாலும் பொங்கல் சீர் இப்பவும் வந்துட்டிருக்கு!"- பெருமாள் முதலியார் பேரன் பேட்டி

திரையை அல்ல திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த படம் 'பராசக்தி'. கருணாநிதியின் கட்டுக்கடங்காத காட்டுத்'தீ' திரைக்கதை, வசனத்தில் சமூக அவலங்களை சுட்டெரித்த புரட்சித்'தீ'. திரையுலத்தின் வெற்றி திலகமான... மேலும் பார்க்க

Parthiban: "தளபதி விஜய், என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்!" - பார்த்திபன் பதிவு

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருவார். அவ்வப்போது தன் வாழ்வில் நிகழ்ந்த தருணங்களையெல்லாம் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் நமக்குச் சொல்வார். Parth... மேலும் பார்க்க