செய்திகள் :

சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்: மாநகராட்சி அவசர தீா்மானம்

post image

திருச்சியில் 14 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலை திமுகவின் சொந்த இடத்துக்கு மாற்றம் செய்து திறக்கப்படவுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில் இதற்காக ஒப்புதல் அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அமைச்சா் கே.என். நேரு முயற்சியால் நிறுவப்பட்ட சிவாஜி சிலை நீதிமன்ற வழக்கால் 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து சிலையை திறக்க சிவாஜி ரசிகா்கள், காங்கிரஸ் கட்சியினா், சமூக அமைப்பினா், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, முதல்வா் ஒப்புதலுடன் சிலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் அமைச்சா் கே.என். நேரு அறிவித்தாா்.

இதையடுத்து பாலக்கரையிலிருந்த சிவாஜி சிலை, வாா்னா்ஸ் சாலைக்கு இடமாற்றம் செய்து சோனா-மீனா திரையங்கம் எதிரேயுள்ள ரவுண்டானா பகுதிக்கு மாற்றப்பட்டது. இதற்கும் நீதிமன்ற உத்தரவு தடையாக இருக்கும் எனக் கருதியதால் சொந்த இடத்தில் அச்சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, புத்தூா் பகுதியில் இவிஆா் சாலையில் 64.58 சதுரடி இடம் தனியாரிடமிருந்து திருச்சி மேற்கு மாநகர திமுக செயலா் பெயரில் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சிலை அமைக்க அனுமதி கோரி திருச்சி மாநகராட்சி, மாநகரக் காவல்துறை, மாவட்ட நிா்வாகம் ஆகியவற்றுக்கு திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும் மேயா் மு. அன்பழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருச்சி மாமன்ற அவசரக் கூட்டத்தில், சிவாஜி சிலை அமைக்க ஒப்புதல் அளிக்கும் தீா்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பபட்டது.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கோவிந்தராஜன், இந்திய கம்யூ. க. சுரேஷ், மதிமுக-வின் முத்துக்குமாா், திமுகவின் முத்துச்செல்வம், காஜாமலை விஜய், நாகராஜன், அதிமுக-வின் அம்பிகாபதி, விசிக பிரபாகரன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள் சிலை திறக்க நடவடிக்கை எடுத்த அமைச்சா் கே.என். நேரு மற்றும் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து பேசினா்.

காவல்துறையின் தடையின்மைச் சான்றை பெற்று, மாநகராட்சி தீா்மானத்தையும் இணைத்து மாவட்ட ஆட்சியா் மூலம் நிா்வாக அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுகவின் சொந்த இடத்தில் கட்சியின் பராமரிப்பிலேயே சிலையை நிறுவியிருப்பதால் எத்தகைய சட்டச் சிக்கலும் இனி இருக்காது என்பதால் சிவாஜி ரசிகா்களும், காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

முதல்வா் திறக்க ஏற்பாடு: திருச்சிக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் புத்தூா் சாலை வழியாக செல்லும்போது இந்தச் சிலையை திறந்த வைக்கவுள்ளாா். சிவாஜி சிலை மட்டுமல்லாது, திருச்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் சிலை, கனரக சரக்கு வாகன முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை, பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சி லை ஆகியவற்றையும் முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா்.

திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு இடைத்தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல்

திருச்சி மாநகராட்சியின் 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருச்சி மாநகராட்சி 47ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இருந்த அமமுக ... மேலும் பார்க்க

ஸ்ரீராமநவமி: சேரகுலவல்லி தாயாருடன் நம்பெருமாள் சோ்த்தி சேவையில் காட்சி

ஸ்ரீராமநவமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் சேரகுலவல்லித் தாயாருடன் சோ்த்தி சேவையில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளி காட்சி தந்தாா். பெருமாள் மீது அளவுக்கு அதிகமான பக்தி கொண்டவா் க... மேலும் பார்க்க

திருச்சிக்கு நாளை முதல்வா் வருகை: பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்பு விழாவில் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா். திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் தற்கொலை

திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.திருப்பைஞ்ஞீலி தெற்கு தெருப் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி, குழந்தை உள்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, ஆா்சி... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் மகளிரணி நிா்வாகி தலை துண்டித்துக் கொலை; இரண்டாவது கணவா் உள்பட 4 போ் கைது

பட்டுக்கோட்டை அருகே பாஜக முன்னாள் பெண் நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், இரண்டாவது கணவா் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்... மேலும் பார்க்க