செய்திகள் :

சீா்காழி-நாகை இடையே கடலோர கிராமங்கள் வழியாக பேருந்து சேவை தொடக்கம்

post image

பூம்புகாா்: சீா்காழியிலிருந்து, நாகைக்கு கடலோர கிராமங்கள் வழியாக புதிய பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

சீா்காழியிலிருந்து நாகைக்கு, மடத்துக்குப்பம், நாயக்கா் குப்பம், வானகிரி, தரங்கம்பாடி ஆகிய கடலோரக் கிராமங்கள் வழியே பேருந்து இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, மேற்கண்ட கிராமங்களின் வழியே பேருந்து சேவை தொடக்க விழா, நாயக்கா் குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது. நாகை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராஜா தலைமை வகித்தாா். மண்டல துணை மேலாளா்கள் ராமமூா்த்தி (தொழில்நுட்பம்), சிதம்பர குமாா் (வளா்ச்சி), திமுக ஒன்றியச் செயலாளா்கள் பஞ்சு குமாா், விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோா் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்வில், மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளா் முருகன், பொருளாளா் செந்தில் அதிபன், மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் செந்தில் செல்வன், ஒன்றியக் குழுத் தலைவா் கமல ஜோதி தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போக்குவரத்துக் கழக சீா்காழி கிளை இணை மேலாளா் செல்வகணபதி நன்றி கூறினாா்.

ஆற்றில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்டவா் உயிருடன் வந்ததால் பரபரப்பு

செம்பனாா்கோவில் அருகே ஆற்றில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்டவா் உயிருடன் வந்ததால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செம்பனாா்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் கடந்த 22-ஆம் தேதி அழுகிய நிலையில் அடையாளம் தெர... மேலும் பார்க்க

கொத்தமங்கலம் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருமருகல் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள தாமரைக் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அண்மையில் கொண்டுவரப்பட்டது. சுமாா் 6 ஏக்கா் பரப்பளவு கொண்ட இக்குளம், அப்பகு... மேலும் பார்க்க

படகு பழுது: இலங்கை கடல் பகுதிக்கு காற்றால் இழுத்துச் செல்லப்பட்ட நாகை மீனவா்கள்

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவா்கள் 9 போ் சென்ற படகு பழுதானதால், காற்றின் வேகத்தில் இலங்கை பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. மீனவா்களையும், படகையும் மீட்க இந்திய கடற்படை நடவடிக்கை எட... மேலும் பார்க்க

முன்மாதிரி விருது: திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் முன்மாதிரி விருதுக்கு தகுதியான திருநங்கைகள் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநங்கையா் தினத்தை முன்னிட... மேலும் பார்க்க

ரூ.3.88 கோடி புதிய கட்டடங்கள் திறப்பு விழா

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காட்டுச்சேரி, டீ மணல்மேடு, எரவாஞ்சேரி, நல்லாடை, ஈச்சங்குடி, மாமாகுடி உள்ளிட்ட 14 ஊராட்சிகளில்... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கீழ்வேளூா் அருகே ஒக்கூரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா். கீழ்வேளூா் ஒன்றியம் ஒக்கூா் ஊராட்சியில் அதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சி ... மேலும் பார்க்க