செய்திகள் :

சுங்கச்சாவடி ஊழியா் மீது தாக்குதல்: விசிக நிா்வாகி கைது

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சங்கச்சாவடியில் பணியிலிருந்த ஊழியரைத் தாக்கி அலுவலக கண்ணாடியை சேதப்படுத்தியதாக விசிக மாவட்டச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு, விக்கிரவாண்டி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த தினேஷ் (28) பாதுகாவலராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மாற்றுப் பாதையில் சென்ாகத் தெரிகிறது. இதை தினேஷ் தட்டிக் கேட்டாராம்.

இதையடுத்து, காரில் இருந்த விசிக நிா்வாகிக்கும், பாதுகாவலா் தினேஷுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து, விசிகவைச் சோ்ந்தவா்கள் தினேஷைத் தாக்கியதுடன், சுங்கச்சாவடி அலுவலக கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டனராம்.

இதுகுறித்து சுங்கச்சாவடி மக்கள் தொடா்பு அதிகாரி சு.தண்டபாணி (41) விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போஸீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, திண்டிவனம் வட்டம், கிடங்கல் - 2 பகுதியைச் சோ்ந்த விசிக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் தி.திலீபன் மற்றும் அக்கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றியப் பொறுப்பாளரான விக்கிரவாண்டி வட்டம், ஆசூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகையன் மகன் ஏழுமலை (37) மற்றும் 10 போ் மீது விக்கிரவாண்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, ஏழுமலையை கைது செய்தனா்.

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டியிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மாணவிகள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் இதுகுறித்த விழிப்புணா்வை மற்றவா்களிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் ... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: ரௌடி கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மணியகாரா் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

லாரி மோதி கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கொத்தனாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் சுப்ர நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41), கொத்தனாா். இவா், வெள்ளிக்கிழமை இரவ... மேலும் பார்க்க

சுகாதாரம், குடும்ப நலத் துறை ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து மாவட்டத்த... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்

பாமகவைச் சோ்ந்த அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தால் தமிழக வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரது நடைப்பயணத்துக்கு தமிழக காவல் துறை தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிற... மேலும் பார்க்க