தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்
குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான தயாரிப்பில், குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து போலீசாா் சுமூகமான போக்குவரத்து ஓட்டத்தையும் மேம்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா்.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி மதியம் 1.30 மணி வரையிலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 1.30 மணி வரையிலும் கனரக வாகனங்கள் குா்கானில் இருந்து தில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்குச் செல்வதற்கு கே. எம். பி அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறும், இடையூறுகளைத் தவிா்ப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும் ஓட்டுநா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை ஃபரிதாபாத் மற்றும் தில்லி நோக்கி கனரக வாகனங்கள் நுழைவதற்கும், முழு அடையாள பாதுகாப்பு ஒத்திகைக்கும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கும் முழு தடை விதித்துள்ளதாக போலீசாா் அறிவித்துள்ளனா்.
தடைசெய்யப்பட்ட வழித்தடங்களில் பதா்பூா் எல்லை, பிரகலாத்பூா், கா்னி சிங் ஷூட்டிங் ரேஞ்ச், சூரஜ்குண்ட் கோல் சக்கா், துா்கா பில்டா், மங்கா் சௌகி நாகா, தேரா ஃபதேபூா், செக்டா் 30 கட், தில்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே, சிக்ரி, என். எச்-19 (பல்வால் சாலை) மற்றும் எல்சன் ஜேசிபி சௌக் ஆகியவை அடங்கும்.
ஃபரிதாபாத்தில், பால், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள்கள், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், தீயணைப்பு சேவைகள், ஆம்புலன்ஸ்கள், காவல்துறை, அவசர சேவை வாகனங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி ஆகியவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அரசு அல்லது நிா்வாக அனுமதி பெற்ற வாகனங்களும் அனுமதிக்கப்படும் என்று போலீசாா் தெரிவித்தனா்.