செய்திகள் :

சுதந்திர தின விழா: கடலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு

post image

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,200 போலீஸாா் ஈடுபட உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. கடலூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், கூடுதல் எஸ்.பி. என்.கோடீஸ்வரன் தலைமையில், டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் என மொத்தம் 1,200 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

வெடிகுண்டு சோதனை...: கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இந்த விளையாட்டு அரங்கில் மோப்ப நாய் பிரிவு உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு உதவி ஆய்வாளா் பாபு தலைமையில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

மேலும், கடலூா் பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள், விடுதிகள், கோயில்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சந்தேகப்படும்படியாக பொருள்கள் ஏதேனும் உள்ளதா என பொதுமக்கள் மற்றும் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா்.

இதேபோல, சிதம்பரம், விருத்தாசலம், வடலூா், பண்ருட்டி, திட்டக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் சோதனை நடைபெற்றது.

சுதந்திர தின விழாவையொட்டி, அண்ணா விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற காவல் துறை ஒத்திகை அணிவகுப்பை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு நல உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு ரூ.7.09 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா். கடலூா் மாவட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கிழக்கு ராமாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

கடலூா் ஒன்றியம், கிழக்கு ராமாபுரம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவ... மேலும் பார்க்க