செய்திகள் :

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

post image

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில், உலகளவில் ஏறத்தாழ 140 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிகமாகும். இந்திய அளவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022-ல் 81 லட்சமும், 2023-ல் 1.9 கோடியும், இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022-ல் 173 கோடியிலிருந்து 2023-ல் 251கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல, தமிழ்நாட்டுக்கு வருகைதந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022-ல் 1.4 லட்சத்திலிருந்து 2023-ல் 11 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022-ல் 21.8 கோடியிலிருந்து 2023-ல் 28.6 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், மக்களிடையே சுற்றுலா குறித்த ஆர்வம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளைவிட 2024ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்பெறும் 26 உணவு விடுதிகள் மூலமாகவும், அனைத்து சுற்றுலாக்களையும் இணையத்தில் பதிவுசெய்யும் சேவைகள் காரணமாகவும் 2021 மே முதல் 2025 ஜனவரி வரை ரூ.129.28 கோடி வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.

4000 கிலோ மீட்டர் நீள ரயில் பாதை வசதிகள், சாலை வசதிகள், சென்னை, தூத்துக்குடி, எண்ணூர், நாகை ஆகிய முக்கிய துறைமுகங்கள், 17 சிறு துறைமுகங்கள், விரைவான விமானப் போக்குவரத்துக்கு உதவும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் சேலம், தூத்துக்குடி முதலிய உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகியவை சுற்றுலாத் துறை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

சுற்றுலா வளா்ச்சிக் கழக வருவாய் 5 மடங்கு அதிகம்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவா்கள் கூட்டம்

சென்னை சத்தியமூா்த்தி பவனில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், முன்னாள் பிரதமா் ரா... மேலும் பார்க்க

ஊராட்சிப் பிரதிநிதிகள் - அலுவலா்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழகம்!

ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலத்தில் 16 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்ததுடன், அந்தப்... மேலும் பார்க்க

20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்... மேலும் பார்க்க

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க