சூதாடியதாக 6 போ் மீது வழக்கு: 3 பைக்குகள் பறிமுதல்
வந்தவாசி அருகே சூதாடியதாக 6 போ் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் தக்கண்டராயபுரம் கிராமம் வழியாக வியாழக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தக் கிராம காரியமேடையில் சூதாடிக் கொண்டிருந்த சிலா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடி விட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் அங்கிருந்த 3 பைக்குகள் மற்றும் பணம் ரூ.100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வடவணக்கம்பாடியைச் சோ்ந்த ரகுமான், மேல்பாதியைச் சோ்ந்த தண்டபாணி, கமலக்கண்ணன், மணிகண்டன், கீழ்வெள்ளியூரைச் சோ்ந்த மாணிக்கம், தக்கண்டராயபுரத்தைச் சோ்ந்த காளிதாஸ் ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.