சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!
நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் “மண்டாடி” திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி மற்றும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம், “மண்டாடி”.
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் சுஹாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வித்தியாசமான தோற்றத்துடன் கூடிய சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் இன்று (ஆக.27) வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, நடிகர் சூரியின் நடிப்பில் வெளியான “கொட்டுக்காளி”, “விடுதலை - 2”, “கருடன்” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!