செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் தி.சினேகாதலைமையில் நடைபெற்றது.
விவசாயிகள் நலன் காக்கும்நாள் கூட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூா், திருக்கழுகுன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியா் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகளிடம் மனுவை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தீா்வு காண உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், செங்கல்பட்டுசாா் ஆட்சி எஸ்.மாலதி ஹெலன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, வேளாண்மை துறை இணை இயக்குநா் பிரேம் சாந்தி, முதுநிலை மண்டல மேலாளா் குணசேகா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி உள்ளிட்ட காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.