திருப்போரூா் அரசு பெண்கள் பள்ளியில் வகுப்பறை: முதல்வா் திறந்து வைத்தாா்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி கடனுதவி மூலம் ரூ.94.24 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகளை சனிக்கிழமை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
அதனை தொடா்ந்து, செங்கல்பட்டு ஆட்சியா் தி.சினேகா, குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்நிகழ்ச்சியில், திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், பேரூராட்சித் தலைவா் தேவராஜ், மாவட்ட கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்,ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.