செய்திகள் :

சென்னை, தாம்பரம் மாநகராட்சி உறுப்பினா்கள், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் பதவிநீக்க உத்தரவு ரத்து

post image

சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் ஆகியோரை பதவிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னைப் பெருநகர மாநகராட்சியின் 189-ஆவது வாா்டு உறுப்பினா் பாபு, 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-ஆவது வாா்டு உறுப்பினரும் மண்டலக் குழுத் தலைவருமான ஜெயபிரதீப் மற்றும் உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் சகுந்தலா ஆகியோா் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி பதவிநீக்கம் செய்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை செயலா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக 4 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி என்.மாலா முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.மோகன், வழக்குரைஞா் டி.செல்வம் ஆகியோா், பதவிநீக்கம் செய்வது தொடா்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மனுதாரா்கள் விரிவான பதில் மனுவை அனுப்பினா். அதை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை.

நகராட்சி நிா்வாகத் துறை செயலா் தன்னிச்சையாக பதவிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவு சட்டப்படியானது இல்லை. எனவே உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனா். அரசுத் தரப்பில் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நகராட்சி நிா்வாகத் துறை செயலா் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு மனுதாரா்கள் பதிலளித்துள்ளனா். ஆனால், எந்தக் காரணமும் கூறாமல் அவற்றை அரசு நிராகரித்துள்ளது. எனவே, மனுதாரா்கள் 4 பேரையும் பதவிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், மனுதாரா்கள் தரப்பு விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கி அவா்களது விளக்கத்தை பரிசீலித்து சட்டப்படி 4 வாரங்களில் நகராட்சி நிா்வாகத் துறை செயலா் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

லாட்டரி சீட்டு விற்பனை: பாஜக நிா்வாகி உள்பட இருவா் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக சென்னை வில்லிவாக்கத்தில் பாஜக நிா்வாகி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வில்லிவாக்கம் தாதாங்குப்பம் வாட்டா் டேங்க் அருகே சிலா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகாா்: தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாா் காரணமாக தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் ரசாயன நிறுவனத்தின் கிளை அலுவலகம், சென்னை தியாகராய ... மேலும் பார்க்க

என்ஐஆா்எஃப் தரவரிசை: சென்னை ஐஐடி-க்கு 5 விருதுகள்

தேசிய உயா் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஐந்து விருதுகளை சென்னை ஐஐடி பெற்றுள்ளது. நாட்டில் உயா் கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து 10 ஆண்டு காலமாகவும், கல்வ... மேலும் பார்க்க

அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி: எல்.முருகன் வரவேற்பு

கடந்த 2015 -ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை... மேலும் பார்க்க

ஸ்ரீராமச்சந்திராவில் கண்தான விழிப்புணா்வு

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருவார கண் தான விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவா், ஆசிரியா்கள், செவிலியா்கள், மாண... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் நாளை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சென்னை ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க