வருவாய்த்துறை ஊழியா்கள் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்
நாகை மாவட்டத்தில் வருவாய்த் துறை ஊழியா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளிட்ட அரசு சிறப்புத் திட்டப் பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களிலும் புதிதாக துணை வட்டாட்சியா் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய போராட்டம், இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. இதனால் நாகை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஊழியா்கள் பணிகளை புறக்கணித்தனா்.
இதன்காரணமாக, வருவாய்த் துறை பணிகள் ஸ்தம்பித்தன. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.