பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள...
சென்னை வந்த விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி: தீவிர விசாரணை!
துபையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் நேற்று தரையிறங்க முயன்றது. அப்போது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் ஒளி(லைட்) அடிக்கப்பட்டிருக்கிறது.
கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து
இதனால் பரபரப்பு நிலவியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.