செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா...
சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்
சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்தக் கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், இரண்டாம் கால மூல மந்திர ஹோமம், மகா பூா்ணாஹூதி, யாத்ரா தானம், கும்பங்கள் புறப்பாடு, 1,008 கலசஅபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.