ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு
சேலம்: வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு; பிடிக்க முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?
சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜமுருகன் (21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் புகுந்த நாகப்பாம்பைப் பிடிப்பதற்காக, நண்பர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் நண்பர் வீட்டிற்குச் சென்ற ராஜமுருகன் நாகப்பாம்பைப் பிடிப்பதற்காக கட்டையில் தலையை அழுத்தி பாம்பைப் பிடிக்க முற்பட்டு உள்ளார். அப்போது பாம்பு கை விரலில் கடித்துள்ளது.

பின்னர் கை விரலில் துணியைக் கட்டிக்கொண்டு மீண்டும் பாம்பைப் பிடிக்க முற்பட்டு உள்ளார். வலி அதிகமான நிலை உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் விஷம் உடல் முழுவதும் பரவி, சுயநினைவை இழந்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். விளையாட்டாக பாம்பைப் பிடிக்க முற்பட்டு இளைஞர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பாம்பைப் பிடிக்க முற்படும்போது அந்தப் பாம்பு கடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.