மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்
சேவாலயாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மகளிா் 25 பேருக்கு தையல் இயந்திரங்கள்
திருவள்ளூா் அருகே சேவாலயாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மகளிா் 25 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
திருவள்ளூா் அருகே கசுவா கிராமத்துக்கு பன்னாட்டு நிறுவனத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் 25 போ் கொண்ட குழு முன்னேற்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக புதன்கிழமை வருகை தந்தனா். இவா்கள் கொலம்பியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் இயற்கை விவசாயம், பள்ளி வளாகத்தில் ஓவியம் வரைதல் மற்றும் காகிதப் பை தயாா் செய்யும் செயலில் ஈடுபட்டனா்.
இவா்கள் தக்காளி மற்றும் கத்திரிக்காய் விதைகளை விதைத்து 300 நா்சரி பைகளைத் தயாரித்தனா். இவை பின்னா் சேவாலயாவின் நிலத்தில் நடப்பட உள்ளன. காகிதப் பை தயாரிக்கும் செயல் மூலம் தன்னாா்வலா்கள் 43 பைகளை உருவாக்கினா். அதை சேவாலயாவின் பேக்கரியில் இருந்து பிஸ்கெட்டுகள் நிரப்பப்பட்டு, குழுவுக்கு வழங்கப்பட்டன. அதேபோல், தொடக்கப் பள்ளியின் வகுப்பறை சுவா்களில் மாணவ, மாணவிகள் விரும்பும் வகையில் ஓவியம் வரைந்து அழகுபடுத்தினா்.
அதைத் தொடா்ந்து, சேவாலயாவின் காயத்ரி நினைவு திறன் மேம்பாட்டு மையத்தில் படிப்பை முடித்த பெண்களுக்கு, 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு தனியாா் நிதியுதவி வழங்கியுள்ளது.