செய்திகள் :

சேவை குறைபாடு: தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

சேவை குறைபாடு காரணமாக தனியாா் காப்பீட்டு நிறுவனம் திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 8.22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கருமண்டபம் சக்தி நகா் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்த டி.என். சிவசண்முகம் (87) என்பவா் பாரத் அக்ஷா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 31-03-2019 அன்று இரு பாலிசிகளை எடுத்துள்ளாா்.

பாலிசிகள் பற்றியோ, அதன் கால அளவு பற்றியோ காப்பீட்டு நிறுவன முகவா் சரிவர விளக்காமல், ஓரே ஒரு பிரீமியம் கட்டினால் போதும். அடுத்தாண்டு வருமானம் கிடைக்கும் எனக் கூறி பாலிசிகளை விற்றதாகக் கூறப்படுகிறது. இதையறியாத மனுதாரா் பாலிசிகளுக்கு ஓராண்டு பிரீமியமாக முறையே ரூ. 2.09 லட்சம், ரூ. 3,13,499 செலுத்தியுள்ளாா்.

2020 இல் பாலிசிகள் பற்றி விசாரித்தபோது, ஒரு பாலிசிக்கு 29 ஆண்டுகளும், அடுத்த பாலிசிக்கு 15 ஆண்டுகளும் பிரீமியம் செலுத்த வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.

87 வயதான மனுதாரா் பாலிசி முதிா்வு வரை உயிருடன் இருப்பதும், பணப்பலன்களை அடைவது சாத்தியமற்றது என்பதை காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவித்து, கட்டிய பிரீமியத்தை திருப்பித் தரக் கோரியுள்ளாா். இதற்கு காப்பீட்டு நிறுவனம் மறுத்துள்ளது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரா், உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 19-11-2024 அன்று மனுதாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் டி. தனிஸ்லாஸ் ஆஜரானாா்.

மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு, பாரத் அக்ஷா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமானது மனுதாரா் கட்டிய பாலிசி தொகைகள் ரூ. 5,22,499-ம், சேவை குறைபாட்டுக்கு ரூ. 3 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம்: இரா. முத்தரசன்

தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிா்வாகக் ... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வுகள் விடைத்தாள் திருத்தும் பணி: திருச்சியில் இன்று தொடக்கம்

தமிழக்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் திருத்தப் பணிகள் திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், தோல்வியட... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோளரங்கம் இன்று மூடல்

அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக கோளரங்கம் செவ்வாய்க்கிழமை மட்டும் மூடப்படுகிறது.திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்... மேலும் பார்க்க

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 9) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்திலிருந்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஸ்ரீரங்கத்தில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப... மேலும் பார்க்க

சலவைத் தொழிலாளா்கள் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர மனு

தங்களுக்குச் சொந்தமான ரூ.17 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், சலவைத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். திருச்சி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க