செய்திகள் :

சொத்து வரி நிா்ணயிக்க லஞ்சம்: புளியங்குடி நகராட்சி ஊழியா் கைது

post image

சொத்து வரி நிா்ணயிக்கும் பணிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளா் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கூறியது: சிவகிரி அருகே தெற்குசத்திரத்தைச் சோ்ந்தவா் காளிராஜன் (36). இவா், புளியங்குடி நகராட்சி 28ஆவது வாா்டு சிவராமு நாடாா் 7ஆம் தெருவிலுள்ள வீட்டுக்கு சொத்து வரி நிா்ணயிப்பதற்காக நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். இதற்காக நகராட்சி வருவாய் உதவியாளா் அகமது உமா் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து காளிராஜன் தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்தாா். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 15 ஆயிரத்தை நகராட்சி அலுவலகத்தில் அகமது உமரிடம் காளிராஜன் வெள்ளிக்கிழமை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி, போலீஸாா் அகமது உமரைக் கைது செய்தனா்.

அரசு ஊழியா்கள் லஞ்சம் கேட்டால் தென்காசி ஊழல் தடுப்பு- கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கலாம் என்றும், அவா்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூா் சிஎஸ்ஐ கல்லூரியில் ஆண்டு விழா

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவா் டி.பி. சுவாமிதாஸ் தலைமை வகித்தாா். மேற்கு சபை மன்றத் தலைவா் ஜேம்ஸ் தொடக... மேலும் பார்க்க

கடையநல்லூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பணிநிறைவு ஆசிரியா்கள், நல்லாசிரியருக்கு பாராட்டு, மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப் ப... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சியில் நெகிழி சேகரிப்பு இயக்கம்

சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளா்களால் நெகிழி சேகரிப்பு இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து... மேலும் பார்க்க

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை: அரியநாயகிபுரத்தில் செயல்முறை விளக்க பயிற்சி

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் கனகம்மாள் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடி- மின்னலுடன் கனமழை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.இதில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமாகின.அதன்பிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி சேனைத்தலைவா் மண்டபம் அருகே பெண் ஒருவா் அவரது 9 வயது மகளுடன் சாலையோர... மேலும் பார்க்க