செய்திகள் :

சௌதி சூப்பர் கோப்பை: ரொனால்டோ உதவியால் அல்-நாஸர் இறுதிக்கு முன்னேற்றம்!

post image

அல்-நாஸர் அணி சௌதி சூப்பர் கோப்பை அரையிறுதியில் 2-1 என வென்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள ஹாங்காங் ஸ்டேடியம் எனும் திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியின் 10-ஆவது நிமிஷத்தில் அல்-நாஸர் அணியின் சடியோ மானே கோல் அடித்து அசத்தினார். அதற்கு பதிலடியாக அல்-இத்திஹாத் கிளப் 16-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது.

1-1 என சம்நிலையில் இருக்க, 25-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுத்து சடியோ மானே வெளியேற்றப்பட்டார். இதனால், 10 வீரர்களுடன் விளையாடியது அல்-நாஸர்.

முதல் பாதியில் இரு அணியும் 1-1 சமநிலையில் இருக்க, இரண்டாம் பாதியில் அல்-நாஸர் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இந்தப் போட்டியின் 61-ஆவது நிமிஷத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ செய்த அசிஸ்ட்டால் அந்த அணியின் ஜாவோ பெலிக்ஸ் கோல் அடித்தார்.

90+5-ஆவது நிமிஷம் வரை போராடியும் அல்-இத்திஹாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், அல்-நாஸர் அணி 2-1 என வெற்றி பெற்றது.

சௌதி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அல்-நாஸர் அணியுடன் வரும் சனிகிழமை (ஆக.23) அல்-கத்சியா எஃப்சி அல்லது அல்-அஹ்லி சவுதி அணி மோதவிருக்கிறது.

Al-Nassr won the Saudi Super Cup semi-final 2-1.

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: ரேணுகா உள்ளே; ஷஃபாலி வெளியே

மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.லேசான காயம் காரணமாக மாா்ச் முதல் களம் காணாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளா் ரேண... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: மனு பாக்கருக்கு வெண்கலம்; ராஷ்மிகாவுக்கு தங்கம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியா் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கா் வெண்கலப் பதக்கம் வெல்ல, ஜூனியா் பிரிவில் ராஷ்மிகா சாகல் தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தினாா்.கஜகஸ்தானில் நடைபெறும் இப்... மேலும் பார்க்க

குகேஷை வென்ற பிரக்ஞானந்தா

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான டி.குகேஷை வீழ்த்தினாா்.வெள்ளை நிற காய்களுடன் விளையாடி குகேஷை பிரக்ஞானந்தா வீழ்த... மேலும் பார்க்க

ஆசிய ஹாக்கி: பாகிஸ்தான் இடத்தில் வங்கதேசம்

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக வங்கதேசம் சோ்க்கப்பட்டுள்ளது.பிகாரில் வரும் 29 முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்தியா வருவதற்கு பாது... மேலும் பார்க்க

ஜூனியா் உலகக் கோப்பை பாட்மின்டன்: இந்திய அணியினா் தீவிர பயிற்சி

குவஹாட்டியில் வரும் அக். 6 முதல் 19 வரை நடைபெறவுள்ள பிடபிள்யுஎஃப் உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியினா் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். உலக பாட்மின்டன் சம்மேளனம், இந்திய ... மேலும் பார்க்க

வாகை சூடினாா் அல்கராஸ்

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றாா். இறுதிச்சுற்றில் அவரை எதிா்கொண்ட ந... மேலும் பார்க்க