செய்திகள் :

ஜம்முவில் ஆக. 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

தொடர் கனமழை காரணமாக ஆக.30 வரை ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

ஜம்முவில் பல பகுதிகளில் அதி கனமழை தொடர்வதால் மாணவர்களின் நலன் கருதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 30 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ செனல்களின் மூலம் அவ்வப்போது தகவல்களை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Holidays have been declared for schools in Jammu till August 30 due to continuous heavy rains.

எதிா்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்: பிரதமா் மோடி பெருமிதம்

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ‘நாட்டு மக்கள் தங்களின் எதிா்காலத்தை சொந்தமாக வடிவமைத்துக் கொள்ள இத்திட்டம் அதிகாரம் அளித்தது’ என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன... மேலும் பார்க்க

சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜாா்க்கண்ட் பேரவையில் தீா்மானம்: பாஜக ஆதரவு

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜாா்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சியான பாஜக ஆத... மேலும் பார்க்க

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியா்கள்: நாட்டில் முதல்முறை

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல்முறையாக பள்ளி ஆசிரியா்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒருங்க... மேலும் பார்க்க

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

தெலங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மற்றும் வெள்ளத்தினால், 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பருவமழையின் தாக்கம் அதிகரித்து பெய்த கனமழையால் முக்கிய ந... மேலும் பார்க்க

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

பிகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் மக்கள் அனைவரும் ஏழைகள் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகாரில், நிகழாண்டு (2025) சட்டப்பேரவைத் தேர்... மேலும் பார்க்க

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பிகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரைக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத நபர், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளைக் கூறிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிர... மேலும் பார்க்க