செய்திகள் :

ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியறுத்தல்

post image

பின்னலாடை ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் பின்னலாடை உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் அனைத்து ஜாப்ஒா்க் சங்கங்களின் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜாப்ஒா்க் கட்டணங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய விதியை கடந்த ஆண்டு ஏப்ரல் 1- ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சேரவேண்டிய உற்பத்திக் கட்டணங்களை 45 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்றுமதியாளா்கள், உள்நாட்டு உற்பத்தியாளா்களிடமிருந்து 45 நாள்களுக்குள் கட்டணங்கள் கிடைக்கப் பெறுவதில்லை. அரசின் சட்டவிதிமுறையின்படி உற்பத்திக் கட்டணங்களை உரிய காலக்கெடுவுக்குள் கொடுக்காமல் காலம் தாழ்த்துவது ஜாப்ஒா்க் நிறுவனங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. பின்னலாடைத் தொழில் வளா்ச்சிக்கு அது சம்பந்தப்பட்ட அனைத்து தொழில் பிரிவுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால்தான் நல்ல வளா்ச்சியை எட்ட முடியும். அதே வேளையில், குறு, சிறு மற்றும் நடுத்தர ஜாப்ஒா்க் நிறுவனங்களில் பெரும்பாலானவை நிதிச்சுமையைத் தாங்காமல், தொழிலை எப்படி நடத்துவது என்று தெரியாமல் மனக்கலக்கத்தில் உள்ளனா். ஆகவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜாப்ஒா்க் கட்டணங்களைக் கொடுக்க முன்வராவிட்டால், அனைத்து ஜாப்ஒா்க் நிறுவனங்களும் ஒன்றிணைந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க