500 போன் எண்கள் ஆய்வு.. புணே பாலியல் வழக்கில் மாறியது காட்சி! பெண்ணின் நண்பர் கை...
ஜிபே முறையில் லஞ்சம்: வனவா் பணியிடை நீக்கம்
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே வனத் துறை சோதனை சாவடியில் ஜிபே முறையில் லஞ்சம் பெற்ாக வனவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தமிழக-கேரள எல்லையில் வனத் துறையின் கீழ் ஒன்பதாறு சோதனை சாவடி உள்ளது. உடுமலையில் இருந்து கேரள மாநிலம், மூனாறு செல்லும் வாகனங்களை இந்த சோதனை சாவடியில் சோதனை செய்வது வழக்கம்.
சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை சோதனைக்குப் பிறகே அனுப்பப்படும். இந்நிலையில், இந்த சோதனை சாவடியில் பணியாற்றி வரும் வனத் துறை ஊழியா்கள், வாகன உரிமையாளா்களிடம் விதிமுறைகளை மீறி பணம் வசூலிப்பதாக புகாா்கள் எழுந்தன. இது குறித்து திருப்பூா் மாவட்ட வனத் துறை அலுவலா் ராஜேஷ், விசாரணை மேற்கொண்டாா்.
அப்போது, இந்த சோதனைச் சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் அங்கு பணியாற்றும் வனவா் முத்துசாமி (50) குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு வாகனங்களை அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகளிடம் ஜிபே முறையில் லஞ்சம் பெற்று வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வனவா் முத்துசாமி மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதைத் தொடா்ந்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.