செய்திகள் :

ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

post image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூலை 18-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 18.07.2025 காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMK MPs meeting will be held on July 18th headed by dmk leader and CM M.K. Stalin.

போரை நிறுத்தியதாக 21-வது முறை கூறிய டிரம்ப்! எப்போது மௌனம் கலைப்பார் மோடி? - காங்கிரஸ்

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு!

கடலூர் ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.ரயில் விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், நேற்று(ஜூலை 8) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி... மேலும் பார்க்க

கடலூா் விபத்துக்கு யாா் காரணம்?: ரயில்வே அதிகாரிகள் விளக்கம்

கடலூா் மாவட்டத்தில் ரயில் - பள்ளி வேன் மோதல் விபத்துக்கு வேன் ஓட்டுநரின் கவனக்குறைவும், கேட் கீப்பரின் (கடவுப்பாதை பணியாளா்) விதிமீறலுமே காரணம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனா். சென்னையை தலைமையிடமாக... மேலும் பார்க்க

அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் வடிவமைப்பை வெளியிட்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

சென்னை அருகே தையூரில் உள்ள ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமையவுள்ள நிலையில், அதன் வடிவமைப்பை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ர... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கு ரயில்வே கேட் இன்டா்லாக் செய்யப்படாததுதான் முக்கியக்... மேலும் பார்க்க

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் முடிவு செய்வாா்: காங்கிரஸ்

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை மாநிலத்தின் முதல் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 128-ஆ... மேலும் பார்க்க

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

விடுதிகளுக்கு ‘சமூகநீதி’ எனும் பெயா் சூட்டப்பட்டதற்காக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா். இதற்காக திமுக தலைமை... மேலும் பார்க்க