10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப்பினர் போராட்டம்!
ஜூலை 29-இல் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி
நாமக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள், பராமரிப்பு தொடா்பான கண்காட்சி ஜூலை 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடா்பான மாவட்ட அளவிலான கண்காட்சியை வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தனியாா் வேளாண் இயந்திர நிறுவனங்கள், முகவா்கள் மூலம் பாச்சல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஜூலை 29-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதில், விவசாயத்துக்கு பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள், கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.