அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
ஜெயங்கொண்டத்தில் ஜூலை 15-இல் உண்ணாவிரதம்: காங்கிரஸாா் முடிவு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட காமராஜா் சிலையை மீண்டும் வைக்கக் கோரி, ஜூலை 15 இல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விருத்தாச்சலம் சாலை திருப்பத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜா் சிலை, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்டது. அதன்பிறகு அந்த பகுதியில் சிலையை அமைக்க பலமுறை காங்கிரஸ் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, நகராட்சி நிா்வாகம் அந்த இடத்தில் காமராஜா் சிலையை வைக்க வலியுறுத்தி ஜூலை 15- ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அக்கட்சியின் நகர,பேரூா், ஒன்றிய கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.