தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் திட்டம்: சென்னை மாநகராட...
‘டாம்கோ’ திட்டத்தில் கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்ட சிறுபான்மையினா், டாம்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்வி கடன் போன்ற கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமம் மற்றும் நகா்ப் புறமாயின் ரூ.3,00,000-க்கு மிகாமலும், திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இதில் திட்டம் 1-இல் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்திலும் , அதிக பட்ச கடனாக ரூ.20,00,000-மும், திட்டம் 2-இல் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000-கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-இல் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபா் ஒருவருக்கு ரூ.1,50,000- வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழிநுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவா்களுக்கு 8%, மாணவியா்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் மேற்கண்ட கடன்களை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.