உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது
டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டாளராக ஏ.சண்முகசுந்தரம் நியமனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டாளராக ஏ.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்தாா்.
அவரது உத்தரவு விவரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டாளராக ஏ.ஜான் லூயிஸ் பணியாற்றி வந்தாா். அவா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிா்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அந்தப் பொறுப்பில் இருந்த ஏ.சண்முகசுந்தரம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.