செய்திகள் :

டி20யில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா..! 4-ஆவது இந்தியராக சாதனை!

post image

ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 தரவரிசையில் நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாபில் அமிர்தசரஸைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (24 வயது) இந்திய டி20 அணியில் 2024இல் அறிமுகமானார்.

இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் 535 ரன்கள் எடுத்துள்ளார்.

இவரது பேட்டிங் சராசரி 33.43ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 193.84ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

பின்னர், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பிறகு, எப்படி முதலிடம் பிடித்தார் தெரியுமா? டிராவிஸ் ஹெட் புள்ளிகள் குறைந்ததால் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை

1. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள் (இந்தியா)

2. டிராவிஸ் ஹெட் - 814 புள்ளிகள் 9 (ஆஸி.)

3. திலக் வர்மா - 804 புள்ளிகள் (இந்தியா)

4. பிலிப் சால்ட் - 791 புள்ளிகள் (இங்கிலாந்து)

5. ஜாஸ் பட்லர் - 772 புள்ளிகள் (இங்கிலாந்து)

Congratulations to Abhishek Sharma, who becomes the Number One batter in ICC Men's T20I rankings.

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதமாகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போ... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்த... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல... மேலும் பார்க்க

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு; முதலிடம் யாருக்கு?

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வரிசைப்படுத்தியுள்ளார்.இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு அண்மையில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்ச... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே... மேலும் பார்க்க