'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விருத்தாசலம் பெரியகண்டியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ். குறவன்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயராணி (21). இவா்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
ராஜேஷ் இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஊா் திரும்பினாா். சாப்பாடு சமைப்பது தொடா்பாக தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் கோபமடைந்த விஜயராணி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.