'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
படைவீட்டம்மன் கோயில் செடல் திருவிழா கொடியேற்றம்
நெய்வேலி, ஜூலை 31: கடலூா் மாவட்டம், பண்ருட்டி, வைத்திரெட்டிப்பாளையம் ஸ்ரீபடைவீட்டம்மன் கோயில் செடல் மற்றும் தேரோட்ட விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, படைவீட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு கோயில் பூசாரிகள் சிறப்பு பூஜைகள் நடத்தி கொடிமரத்தில் செடல் மற்றும் தேரோட்ட விழாவுக்கான கொடியேற்றினா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
விழாவையொட்டி, தினமும் காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மாலையில் சிங்க, பூத, நாக, அன்ன, யானை, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதியுலா நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வாக வரும் 8-ஆம் தேதி செடல் மற்றும் தேரோட்ட விழா நடைபெற உள்ளது.