SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆண...
அரசு மருத்துவக் கல்லூரியில் எம்ஜிஆா் பல்கலை. துணைவேந்தா் ஆய்வு
சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மருத்துவத் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா். மேலும், மருத்துவ ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தாா்.
பின்னா் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி சி.திருப்பதி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ந.ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா் பாலாஜி சுவாமிநாதன், குழந்தைகள் நலத் துறை தலைவா் மருத்துவா் ராமநாதன், உறைவிட மருத்துவ அலுவலா்கள் பாரி, அசோக்பாஸ்கா், துணை உறைவிட மருத்துவ அலுவலா் திருஞானம் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.