செய்திகள் :

டெலிவரி நிறுவன ஆள்கள் கண்காணிப்பு: டிஜிபிக்கு நோட்டீஸ்

post image

சென்னை: உணவு, மருந்து, காய்கறி உள்ளிட்டப் பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு விநியோகம் செய்யும் டெலிவரி நிறுவன ஆள்களைக் கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

டெலிவரி நிறுவன ஆள்களைப் போல சென்று வீடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், டெலிவரி நிறுவன ஆள்களை கண்காணிக்க புதிய விதிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பொது நலன் மனுவை விசாரித்த நீதிமன்றம், விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், டிஜிபி பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக காவல்துறை டிஜிபி 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்சோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வழிப்பறி வழக்கு: சிறையிலுள்ள உதவி ஆய்வாளா் உள்பட 5 பேரை மீண்டும் கைது செய்ய திட்டம்

வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 5 பேரையும் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்ய போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பணம் வசூலிப்பாளராக பணியாற்றிவரும்... மேலும் பார்க்க

ஜேஇஇ தோ்வு: இணைய விண்ணப்பப்பதிவு தொடக்கம்

ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ... மேலும் பார்க்க

நிஜாமுதின் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரத்தில் இருந்து தில்லி நிஜாமுதினுக்கு இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

’ஒயிட் காலர்' குற்றங்களில் ஈடுபட்ட 291 பேர் கைது ரூ.41.50 கோடி சொத்துகள் மீட்பு

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டில் "ஒயிட் காலர்' குற்றங்களில் ஈடுபட்ட 291 பேர் கைது செய்யப்பட்டு ரூ.41.50 கோடி சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என ஆணையர் க... மேலும் பார்க்க

கோரக்பூா், தானாப்பூா் ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்

கோரக்பூா், தானாப்பூா் மற்றும் கோா்பா செல்லும் விரைவு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத் ரயில்... மேலும் பார்க்க

ரூ.8.57 கோடி பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது!: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அறிஞருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க